என் மலர்
நீங்கள் தேடியது "காசா முனை"
- நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் அறிவிப்பு
- வெடிகுண்டுகள் தவறாக கையாளப்பட்டதால் விபத்து
பாலஸ்தீனம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். அதேபோன்று, காசா முனையை பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துவார்கள். இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராட்டக்காரர்களும் காசா முனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த இடம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளிக்கும்.
கடந்த 2005-ம் ஆண்டு காசா முனையில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. அந்த பகுதியில் வேலியிடப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2007-ல் அந்த பகுதியை ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய நாளை நினைவு கூறும் வகையில் போராட்டக்காரர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டனர். அவர்கள் நாட்டின் கொடியை அசைத்து, டயர்களை எரித்து போராட்டடத்தில் ஈடுபட்டனர். வேலியை தகர்க்கும் வகையில் குண்டுகளை வீச முயன்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக குண்டுகள் வீசப்படுவதற்கு முன்னதாகவே வெடித்துள்ளது. இதனால் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு முன், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கையெறிகுண்டுகள், மற்ற வெடிபொருட்களை எல்லையை நோக்கி வீசினார்கள். ராணுவம் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர். இதில் 25 பேர் காயம் அடைந்தனர் என ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடங்கியது
- 75 நாட்களை கடந்து தீவிரமாக இப்போர் நடைபெற்று வருகிறது
கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 3000 பேர் தரை, வான் மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் எல்லை பகுதிகளில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தனர். அந்த பயங்கரவாதிகள் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களை நடத்தி கொடூரமாக கொன்றனர். மேலும், சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் நிறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது.
போர் நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் அழைப்பு விடுத்தும் இஸ்ரேல் சம்மதிக்கவில்லை.
75 நாட்களை கடந்து தீவிரமாக தொடர்ந்து நடைபெறும் இப்போரில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, அங்கு மருத்துவமனைகள் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன.

இப்போர் விரைவில் முடிவுக்கு வராவிட்டால் உலக போராக மாறும் அபாயம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
- பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும், பலர் ஹமாஸ் வசம் உள்ளனர்
- பெய்ரூட்டில் ஹமாஸின் முக்கிய தலைவர் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்
கடந்த 2022 அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200க்கு மேற்பட்டவர்களை கொன்று, சுமார் 240 பேர்களை பணயக்கைதிகளாக கொண்டு சென்றது.
இதற்கு பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்த இஸ்ரேல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள் நிறைந்திருக்கும் பகுதியான பாலஸ்தீன காசா மீது போர் தொடுத்தது.
85 நாட்களை கடந்து நடைபெறும் இப்போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட பல நாடுகள் முயற்சித்தாலும், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதில் தீவிரமாக உள்ளது.
பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும் பலர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர்.
கடந்த செவ்வாய் அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவரான சலே அல் அரவ்ரி (Saleh al-Arouri) மற்றும் பல தலைவர்கள் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது என நம்பப்படுகிறது.
இதனால், கத்தார் மற்றும் எகிப்து மூலம் இஸ்ரேலுடன் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஹமாஸ் விலகி விட்டது.
இப்பின்னணியில், கத்தார் பிரதமர் மொஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி (Mohammed bin Abdulrahman Al Thani), நேற்று தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அவர்களிடம், "பணய கைதிகளின் குடும்பத்தினரின் துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பெய்ரூட் நகர தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமாக உள்ளது" என அல் தனி தெரிவித்தார்.
- சட்டத்திற்கு 61 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் 41 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காசா முனை அல்லது வேறு பகுதிக்கு 20 ஆண்டுகள் வரை நாடு கடத்தப்படுவார்கள்.
இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மற்றும் அவருடைய ஆதரவு வலதுசாரி கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. பாராளுமன்றத்தில் 61 உறுப்பினர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 41 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு தடைவிதிக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்கள், இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ளவர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் தாக்குதல் குறித்து முன்னதாக தெரிந்துள்ளவர்களாக இருந்தால், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அல்லது அடையாளத்தை தெரிவிப்பவர்களாக இருந்தால் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். அவர்கள் ஏழு முதல் 20 ஆண்டுகளுக்கு காசா முனை அல்லது மற்ற பகுதிக்கு நாடு கடத்தப்படுவார்கள்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இந்த சட்டம் பொருந்துமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை, அங்கு இஸ்ரேல் ஏற்கனவே தாக்குபவர்களின் குடும்ப வீடுகளை இடிக்கும் நீண்டகாலக் கொள்கையைக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
- காசா முனையில் மனிதாபிமான பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் தாக்குதல்.
- லெபனானில் ஹிஸ்புல்லாவின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையிலும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனானிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குல் நடத்திய வருகிறது.
காசா முனையில் கடந்த 24 மணி நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனான் நாட்டின் தெற்கு பெய்ரூட் பகுதிகளில் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசாவுக்குள் அதிக மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, இஸ்ரேலுக்கான ராணுவ ஆதரவைக் குறைக்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் வான்தாக்குதலை நடத்தியுள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா நடமாட்டம் அதிகமாக காண்ப்பட்ட தஹியே என்ற பகுதியில் இஸ்தேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இங்குள்ள 11 வீடுகளில் இருந்தவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
ஹிஸ்புல்லாவின் கட்டமைப்பு, கட்டளையிடும் மையம், ஆயுதங்கள் தயாரிக்கும் இடம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.