என் மலர்
நீங்கள் தேடியது "தர்மன் சன்முகரத்தினம்"
- சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
- சிங்கப்பூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் புதிய அதிபருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சிங்கப்பூரில் கடந்த 1-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக அவர் இன்று பதவியேற்றார். சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா யாகூப்-ஐ தொடர்ந்து அந்நாட்டின் ஒன்பதாவது அதிபராக தர்மன் பதவியேற்று இருக்கிறார். முன்னாள் அதிபர் ஹலிமா யாகூப்-இன் பதவிக்காலம் நேற்றுடன் (செப்டம்பர் 13) நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 14) தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றுள்ளார். சிங்கப்பூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் புதிய அதிபருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
2019 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராக பதவி வகிக்து வந்துள்ளார். மே 2011 முதல் மே 2019 வரை தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஆர்.நாதன் என்று அறியப்பட்ட செல்லப்பன் ராமநாதன் மற்றும் செங்கரா வீட்டில் தேவன் நாயர் ஆகியோர் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இந்தியா வந்துள்ளார்.
- அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
புதுடெல்லி:
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் சண்முகரத்னத்தை பிரதமர் மோடி இன்று இரவு சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று மாலை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்தேன். இந்தியா-சிங்கப்பூர் விரிவான மூலோபாய கூட்டுறவின் முழு வீச்சு குறித்து விவாதித்தோம். டிஜிட்டல் மயமாக்கல், திறன், இணைப்பு மற்றும் பல எதிர்காலத் துறைகளைப் பற்றி பேசினோம். தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் கலாசாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் பேசினோம் என பதிவிட்டுள்ளார்.