என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேளாண் அறிவியல் நிலையம்"
- நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி நடை பெற்றது.
- தேனீ வளர்ப்பின் பயன் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும் கூறப்பட்டது.
திருவாரூர்:
தேசிய தேனீ வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் நீடாமங்கலத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு குறித்து 7 நாள் பயிற்சி தொடங்கியது.
இந்த பயிற்சியை விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் தொடங்கி வைத்து தேனீ வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டார்.
உழவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேனீ வளர்ப்பின் பங்கு குறித்தும், சுற்றுச்சூழல் சமநிலைப்படுத்துதலில் தேனீக்களின் பங்கு குறித்தும் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலெட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோர் பேசினர்.
இதனை தொடர்ந்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெரியார் ராமசாமி, தொழில்நுட்ப வல்லுனர்(பயிர் பாதுகாப்பு) ராஜேஷ் ஆகியோர் தேனீ வளர்ப்பின் பயன் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், பயிற்சியின் நோக்கம் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.
பயிற்சியில் தேனீவளர்ப்பு கருத்துக்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர்.