என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா கண்டனம்"
- கொலம்பியா மாகாணத்தில் 17 வயது சீக்கிய மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
- குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 17 வயது சீக்கிய மாணவர் தாக்கப்பட்டுள்ளார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் அவர், ரட்லேண்ட சாலை தெற்கு-ராப்பூர் சாலை கிழக்கு சந்திப்பில், பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது இரண்டு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்பு பஸ்சில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் பஸ்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய துணை தூதரகம் கூறும்போது, "சீக்கிய மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்து உள்ளது.
- புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது.
- இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேபால்:
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா,கலாபானி ஆகிய பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய பகுதிகளை இணைத்து புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படம், நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது.
100 ரூபாய் நோட்டுகளில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி உள்ளிட்ட பகுதிகள் உள்ள நேபாளத்தின் புதிய வரைபடத்தை அச்சிட பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு செய்தித்தொடர்பாளர் ரேகா சர்மா தெரிவித்தார். நேபாளத்தின் இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெய்சங்கர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- காலிஸ்தான் கொடிகளை ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பினர்.
லண்டன்:
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
லண்டனில் உள்ள சாட்தம் ஹவுஸ் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய் சங்கர் கலந்து கொண்டார். அப்போது அந்த கட்டிடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த ஜெய்சங்கர் காரில் ஏறினார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு ஜெய்சங்கரின் காரை நோக்கி ஒருவர் ஓடிவந்து கையில் வைத்திருந்த தேசிய கொடியை கிழித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில் தேசிய கொடி கிழிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.