search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக நடந்த பாதுகாப்பு மீறல் -  இந்தியா கடும் கண்டனம்!
    X

    லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக நடந்த பாதுகாப்பு மீறல் - இந்தியா கடும் கண்டனம்!

    • ஜெய்சங்கர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • காலிஸ்தான் கொடிகளை ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பினர்.

    லண்டன்:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    லண்டனில் உள்ள சாட்தம் ஹவுஸ் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய் சங்கர் கலந்து கொண்டார். அப்போது அந்த கட்டிடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த ஜெய்சங்கர் காரில் ஏறினார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு ஜெய்சங்கரின் காரை நோக்கி ஒருவர் ஓடிவந்து கையில் வைத்திருந்த தேசிய கொடியை கிழித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த நிலையில் தேசிய கொடி கிழிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×