என் மலர்
நீங்கள் தேடியது "படிக்கட்டுகள்"
- மலைக்கு செல்வதற்காக 500 படிக்கட்டுகள் உள்ளன.
- பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி மலை உச்சி வரை இலகுவாக ஏறி சென்று வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயரம் உள்ள மருந்து வாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் சித்த மருத்துவ மருந்து தயாரிப்பதற்கான மூலிகை கள் ஏராளமாக வளர்ந்து உள்ளன.
இதனால் இந்த மலைக்கு மருந்துவாழ் மலை என்று பெயர் வரக் காரணம் ஆயிற்று. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலையில் ஜோதிலிங் கேஸ்வரர் கோவில், பர மார்த்தலிங்க சுவாமி கோவில், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று "மகா தீபம்" ஏற்றப்படுவது வழக் கம். இதனால் இந்த மலைக்கு குமரியின் திருவண்ணா மலை என்று ஒரு பெயரும் உண்டு.
இந்த மலையில் சித்தர்கள் தவமிருக்கும் குகைகளும் உள்ளன. இந்த மலைக்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். இந்த மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மழையின் உச்சிவரை சென்று குமரியின் இயற்கை அழகை பார்த்து ரசிப்பது வழக்கம். இந்த மலைக்கு செல்வதற்காக 500 படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிக்கட்டுகள் சேத மடைந்த நிலையில் காணப் பட்டன.
இதைத்தொடர்ந்து மருந்து வாழ் மலை பாது காப்பு இயக்கம் சார்பில் சேதம் அடைந்த இந்த 500 படிக் கட்டுகளும் சீரமைக் கப்பட்டு உள்ளன. பொது மக்கள் மற்றும் பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெற்று இந்த படிக்கட்டுகள் சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. இதனால் தற்போது பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி மலை உச்சி வரை இலகுவாக ஏறி சென்று வரு கிறார்கள்.