என் மலர்
நீங்கள் தேடியது "புஜங்கனூர்"
- மழலையர் பிரிவு மாணவர்கள் விநாயகர் போல வேடமிட்டு அசத்தல்
- களிமண்ணாலான விதை விநாயகரை செய்து விழிப்புணர்வு
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அடுத்த புஜங்கனூர் விநாயக வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சர்லின் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பட்டய கணக்கர் கோபிநாத் கலந்துகொண்டு பேசினார். மழலையர் பிரிவு மாணவ-மாணவியர்கள் விநாயகர் போல் வேடமிட்டு விழாவிற்கு அழகுசேர்த்தனர். பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் களிமண்ணாலான விதை விநாயகரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.