என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறப்பு கூட்டத்தொடர்"
- மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, இந்த மசோதா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர்.
இந்த மசோதா மீது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மசோதாவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறேன். இது நிறைவேற்றப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
இரவில் மாநிலங்களவைக்கு வந்த பிரதமர் மோடி, இந்த மசோதா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இரவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதன்மூலம் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
இதையடுத்து, கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து பெண் எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்தது. அதன்பின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
- மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.
- இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் யாரும் எதிராக வாக்களிக்கவில்லை.
புதுடெல்லி:
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இக்கூட்டத் தொடர் மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது.
சிறப்பு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று, அந்த மசோதா நிறைவேறியது.
இதற்கிடையே, மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் இன்று வரை நடைபெற்றது.
இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 454 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்
- இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்
பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
454 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம் என ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். நானும், எனது கட்சியின் இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தோம் என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''மகளிர் இடஒதுக்கீடு மசோதா முஸ்லிம் மற்றும் ஓபிசி பெண்களுக்கான துணை ஒதுக்கீட்டை வழங்கவில்லை. ஓபிசி மற்றும் முஸ்லிம்களை ஒதுக்கீடு வரம்பில் சேர்க்கக்கோரி இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் போராடுகிறார்கள் என்பதை நாடு அறியும் வகையில் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமாக ஓபிசி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு போதுமான பிரதிநித்துவத்தை பாராளுமன்றம் மற்றும் சட்டசபை ஆகியவற்றில் இந்த மசோதா வழங்கவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், அரசு அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது?. நாட்டில் 7 சதவீத முஸ்லிம் பெண்கள் உள்ளனர். ஆனால், அவர்ளுடைய பிரநிதித்துவம் சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் 0.7 சதவீதம் மட்டுமே ஆகும்'' என்றார்.
- 33% இடஒதுக்கீடு மசோதா முழுமை பெறவில்லை என்று ராகுல் காந்தி கருத்து.
- நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும்.
பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் 454 வாக்குகள் ஆதரவாகவும், 2 வாக்குகள் எதிராகவும் பதிவாகி உள்ளன.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெற்று வந்தது. இன்று முழுக்க இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
- நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ராகுல் காந்தி மசோதாவை ஆதரித்து பேசியுள்ளார். மேலும், இந்த மசோதா முழுமை பெறாமல் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
இகு குறித்து பேசும் போது, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நான் ஆதரவளிக்கிறேன். இது நம் நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும். அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், பல்வேறு வழிகளில் அவர்கள் திறமை மிக்கவர்கள்."
"ஆனால், என் பார்வையில் இந்த மசோதா ஒருவிதத்தில் முழுமை பெறாமல் உள்ளது. எனக்கு ஓ.பி.சி. பிரிவை சார்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாதது முழுமை பெறாத ஒன்றாகவே இருக்கிறது. மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ள 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவை சேர்ந்தவர்கள். இந்த சமூக பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால், இந்த மசோதா முழுமையற்றதாக இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளார்.
- சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்.
- மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்றைய விவாதத்தில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, பெண்களுக்கு சமமான மதிப்பு கொடுத்தாலே போதுமானது என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசும் போது, "பெண்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டாம், அவர்களை கொண்டாட வேண்டாம். பெண்களை சமமாக நடக்க அனுமதியுங்கள். எங்களை தாய் என்றோ சகோதரி என்றோ மனைவி என்றோ அழைக்க வேண்டாம். எங்களையும் சமமாக நினைத்து, மரியாதை அளித்தாலே போதுமானது."
"இந்த விவகாரம் தொடர்பாக என்ன கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டு இருக்கிறது. என்னென்ன விவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த மசோதா மிகவும் ரகசியமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது. எங்களுக்கும் உரிமை உள்ளது. இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. இந்த நாடாளுமன்றம் எங்களுக்கு சொந்தமானது," என்று தெரிவித்தார்.
- 2029-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் என தகவல்
- உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய 3-வது நாள் முழுவதும் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மக்களவை தொடங்கியதும், பாராளுமன்றத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
அப்போது அவர் "காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'' என்றார்.
- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இந்த மசோதாவை மக்களவையில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்ய முடிவானது.
புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று பிற்பகல் கூடின. அந்த கூட்டத்தில் முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.
மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில், மக்களவையில் மகளிர் இட ஓதுக்கீடு மசோதா குறித்து பேச தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி இன்று உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் இன்று புதிய கட்டிடத்துக்கு செல்கிறோம்.
- இந்தியா முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயரும் என்று உலகம் நம்புகிறது.
புதுடெல்லி:
பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் புதிய எதிர்காலத்திற்கான புதிய தொடக்கங்களை தொடங்க உள்ளோம். வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் இன்று புதிய கட்டிடத்துக்கு செல்கிறோம்.
இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய பயணத்தை தொடங்குகிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். நமதுஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது. அரசியல் சாசனத்திற்கு பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் வடிவம் கொடுக்கப்பட்டது.
பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் மிக்க முடிவுகள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் எடுக்கப்பட்டு உள்ளன.
முத்தலாக்கை எதிர்க்கும் சட்டம் இங்கிருந்து ஒற்றுமையாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் முஸ்லீம் தாய்மார்கள் சகோதரிகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் திருநங்கைகளுக்கு நீதி வழங்கும் சட்டத்தையும் பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. மாற்று திறனாளிகளுக்கு ஒளி மயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை நாங்கள் ஒற்றுமையாக நிறைவேற்றி உள்ளோம்.
பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு முக்கியமானதாக இருந்த 370-வது சட்டப்பிரிவு இந்த பாராளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது நமது அதிர்ஷ்டம். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு-காஷ்மிரில் அமைதி நிலவுகிறது.
இன்று பாரதம் 5- வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. உலகின் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாட்டை மாற்ற வேண்டும். இங்குள்ள சிலர் அப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் இந்தியா முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயரும் என்று உலகம் நம்புகிறது.
அனைத்து சட்டங்களும், பாராளுமன்றத்தில் நடக்கும் அனைத்து விவாதங்களும் நமது விருப்பங்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிபாட்டை இன்று மீண்டும் உறுதி படுத்துகின்றோம். என்னிடம் ஒரு ஆலோசனை இருக்கிறது. புதிய பாராளு மன்றத்துக்கு செல்லும் போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் கவுரவம் ஒருபோதும் குறைய கூடாது. இதை பழைய பாராளுமன்ற கட்டிடமாக விட்டு விடக்கூடாது. எனவே நான் கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் ஒப்புக்கொண்டால் இது சம்விதன் சதன் (அரசியல் சாசன மாளிகை) என்று அழைக்க பரிந்துரை செய்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- பழைய கட்டிடத்திற்கு சம்விதான் சதன் என பெயர் சூட்ட பிரதமர் பரிந்துரை
- காங்கிரஸ் தலைவர் சவுத்ரி இந்திய அரசியலமைப்பை கையில் ஏந்தியபடி புதிய கட்டிடத்திற்குள் நுழைந்தார்
பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் இந்த கட்டிடம் திறக்கப்பட்டாலும் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக அங்கு பணிகள் நடக்க தொடங்கி உள்ளன.
இதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், பழைய பாராளுமன்றத்தில் இருந்து புதிய பாராளுமன்றத்துக்கு இடமாற்றம் செய்தனர். மதியம் 12.55 மணிக்கு பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட புத்தக நகலை ஏந்தியபடி முன் வரிசையில் நடந்து செல்ல எம்.பி.க்கள் அனைவரும் தொடர்ந்து சென்றனர்.
புதிய பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததும் முறைப்படி அலுவல்கள் தொடங்கின. பிற்பகல் 1.15 மணிக்கு மக்களவை அமர்வு தொடங்கியது. அதுபோல பிற்பகல் 2.15 மணிக்கு மாநிலங்களவை அமர்வு தொடங்கியது.
இதன் மூலம் புதிய பாராளுமன்றத்தில் முறைப்படி பணிகள் தொடங்கி உள்ளன. இனி அனைத்து பாராளுமன்ற கூட்டங்களும் புதிய கட்டி டத்தில்தான் நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி தினம் வட மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. இதை வெற்றி தரும் தினமாக வட மாநில மக்கள் கருதுகிறார்கள். இதை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று முதல் நாள் எம்.பி.க்கள் வருகையும், பூஜையும்தான் இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் முதல் நாள் கூட்டத்திலேயே வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்பேரில்தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் மசோதாவை இன்றே தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முதல் கட்ட பணிகள் நடந்தன. 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2 ஆண்டுகளில் மிக குறுகிய காலத்தில் இந்த பிரமாண்டமான புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 600 சதுரடி கொண்டது. 3 நுழைவு வாயில்களுடன் கட்டப்பட்டுள்ளது. உள் அலங்காரங்கள் நிறைய செய்யப்பட்டு இருப்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கண்கவர் வகையில் அமைந்துள்ளது.
- முத்தலாக் போன்ற முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
- இந்தியா 3-வது இடத்திற்கு உயரும் என உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது
பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து, அதன் மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லுங்கள்
1952-ல் இருந்து 41 நாட்டின் தலைவர்கள் இங்கு நம்முடைய எம்.பி.க்கள் மத்தியில் உரையாற்றியுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முத்தலாக் போன்ற முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னதாக செய்யப்பட்ட பல தவறுகள் திருத்தப்பட்டுள்ளன.
தீவிரவாதம், பிரிவினை ஆகியவற்றிற்கு எதிராக போரிட, பாராளுமன்றத்தில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது நம்முடைய சிறந்த அதிர்ஷ்டம்
இன்று, பாரத் 5-வது மிப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 3-க்கு கொண்டு வருவதே லட்சியம். இங்குள்ள சிலர் அப்படி நினைக்காமல் இருக்கலாம். ஆனால், இந்தியா 3-வது இடத்திற்கு உயரும் என உலகம் உறுதியாக இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளாக பார்க்காத வகையில் இந்தியா தற்போது திகழ்கிறது. இந்த நேரத்தில் நாம் வசித்து வருவது அதிர்ஷ்டம்.
இந்தியாவின் லட்சியத்தை உயர்த்தும் எண்ணத்தோடு அனைத்து சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து விவாதங்களும் நடைபெற்றுள்ளன.
நாம் மேற்கொள்ளும் அனைத்து சீர்திருத்தங்களுக்கும் இந்திய அபிலாஷைகளுக்கு முன்னுரிமையாக இருக்கும்.
இந்தியா பெரிய லட்சியங்களை நோக்கி நகர வேண்டும். சிறு பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்
- மத்திய மந்திரிசபை மகளிர் இடஒதுக்கீடு மாசோதாவிற்கு ஒப்புதல்
- இந்த மசோதா எம்.பி.களுக்கான அக்னி பரீட்சை என மந்திரி சபை கூட்டத்தில் மோடி பேசியதாக தகவல்
பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க முடியாத நிலை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் 3 பொது தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருந்தது.
2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி அந்த இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அது சட்டமாக முடியாமல் போனது.
அதன் பிறகும் பல தடவை மக்களவையில் அந்த மசோதாவை நிறை வேற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால் சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற இயலவில்லை.
இந்த நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி சாதனை படைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நேற்று இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மசோதாவை தாக்கல் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று காலை அதிகாரப்பூர்வமாக பிரியாவிடை அளிக்கப்பட்டது.
பழைய பாராளுமன்றம் முன்பு அமர்ந்து எம்.பி.க்கள் கூட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு மைய மண்டபத்தில் எம்.பி.க்கள் கூடினார்கள்.
அங்கிருந்து பிரதமர் மோடி தலைமையில் எம்.பி.க்கள் புதிய பாராளுமன்றத்துக்கு அணிவகுத்து சென்றனர். அமைச்சர்கள் புடைசூழ பிரதமர் மோடி முதலில் சென்றார். அவர்கள் புதிய பாராளுமன்றத்தில் தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.
இன்று பிற்பகல் புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடுகின்றன. அந்த கூட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
பாராளுமன்றத்தில் மொத்தம் 543 எம்.பி.க்கள் உள்ளனர். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்காக கொண்டு வரப்பட்டால் 179 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும்.
அதுபோல நாடு முழுவதும் 4,126 எம்.எல்.ஏ. தொகுதிகள் உள்ளன. 33 சதவீத இட ஒதுக்கீட்டால் 1,362 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும். தமிழகத்தில் பெண்களுக்கு 13 எம்.பி. தொகுதிகளும், 77 சட்டசபை தொகுதிகளும் கிடைக்கும்.
இதன் மூலம் பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்கள் அதிகளவு நுழைய வாய்ப்பு ஏற்படும்.
இதற்கிடையே மந்திரி சபை கூட்டத்தில், இந்த மசோதா பாராளுமன்ற எம்.பி.களுக்கான அக்னி பரீட்சை என பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்