search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாள் கோவிலில் பாலாலய பூஜை"

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் கடந்த 1993-ம் ஆண்டுக்கு பின்னர் பக்தர்கள் சார்பில், மகாசம்ரோக்ஷனம் நடந்தது.

    கோவில் வளாகத்தில் யாக பூஜை செய்து பாலாய பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து மூலவர், ராஜகோபுரம், கருடாழ்வார், விநாயகர், ஆண்டாள், ஆஞ்சநேயர் ஐயப்பன், துர்க்கையம்மன் ஆகிய சிலைகளுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.

    மேலும் அத்தி மரப்பலகையில் ஆவாகனம் செய்து தனி அறையில் வைத்து தினமும் பூஜைகள் நடத்தப்பட உள்ளது.

    இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள், பெரிய தனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×