என் மலர்
நீங்கள் தேடியது "விஸ்வ பிரம்ம ஜெயந்தி"
- விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா ராமசாமியாபுரம் சமுதாய நலக்கூட மண்டபத்தில் நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு விஸ்வ பிரம்ம ரத ஊர்வலம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகர விஸ்வ பிரம்ம மகாஜனம் சங்கம் சார்பில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா ராமசாமியாபுரம் 4-வது தெருவில் உள்ள சமுதாய நலக்கூட மண்டபத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் இசக்கிராஜன், பொருளாளர் செண்பக நாராயணன், துணைத் தலைவர் சுப்புராஜ், துணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகைத் தொழிலாளர் மத்திய சங்க மாநில தலைவர் சங்கரன் வரவேற்று பேசினார்.
விழாவை முன்னிட்டு விஸ்வ பிரம்ம ரத ஊர்வலம் நடைபெற்றது. ராமசாமியாபுரம் 4-வது தெருவில் உள்ள விஸ்வகர்ம சமுதாய நலக்கூடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய ரதவீதி வழியாக மீண்டும் சமுதாய நலக்கூடத்தை வந்தடைந்தது. இதில் சங்க நிர்வாகிகள் மாரியப்பன், வீரபாண்டியன், முத்துவேல், அருள் கணேசன், பரமசிவன், அருணாச்சலம், சிவக்குமார், சிங்கார வடிவேலு, முருகையா, சக்திவேல், வீரபுத்திரன், கைலாசம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜா சங்கர் நன்றி கூறினார்.