search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமராக்கள் பழுது"

    • 10 கேமராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகின்றன
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக வணங்கி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வருகின்றனர்.

    இதில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களும் மற்றும் தினந்தோறும் பல ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வெளிநாடு வெளி மாநிலம் வெளி மாவட்டம் உள்ளூர் பக்தர்கள் என கிரிவலம் செல்கின்றனர்.

    கிரிவல பாதையில் அவ்வப்போது பல்வேறு குற்ற செயல்களை நடைபெற்று வருவதை தொடர்ந்து 8 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 கிலோ மீட்டருக்கு ஒரு ரோந்து போலீசார் போடப்பட்டுள்ளனர்.

    மேலும் 14 கிலோமீட்டர் சுற்றிலும் சுமார் 130 கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. இந்த சிசிடி கேமரா மூலம் பல்வேறு குற்ற செயல்களை அவ்வப்போது கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வந்தனர்.

    இதில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்களை இந்த கேமராக்கள் மூலம் தான் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில மாதங்களாகவே இந்த கேமராக்கள் பராமரிப்பு இன்றி பொருத்தப்பட்ட திசையில் இருந்து மாறியும் பழுதடைந்தும் கிடக்றிது.

    தற்போது வெறும் 10 கேமராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கிரிவலப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள இந்த 130 கேமராக்களையும் பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இந்த கேமராக்களை ஏன் பராமரிக்கவில்லை என்பது குறித்து தெரியவில்லை. ேபாலீசார் பராமரிக்கும் பணி அவர்களிடம் இல்லாததால் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×