என் மலர்
நீங்கள் தேடியது "திருவள்ளுவர் சிலை அகற்றம்"
- அதே இடத்தில் மீண்டும் நிறுவ வலியுறுத்தல்
- திருவண்ணாமலையில் 25 ஆண்டுகளாக இருந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகரில் திருவள்ளுவர் சிலை கடந்த 1998-ம் ஆண்ட அமைக்கப்பட்டது. திருவண் ணாமலை - திருக்கோவிலூர் சாலை சந்திப்பில் கேப்டன் சாமிநாதன் என்பவர் திருவள்ளுவர் சிலையை நிறுவினார்.
அப்போதைய வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலைக்கு தை மாதம் 2-ம் நாளன்று அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலை கடந்த 19-ந் தேதி இரவு அகற்றப்ப ட்டது. திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டதும், 'பொக்லைன்' இயந்திரம் மூலம்பீடம் இடிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் சிலை அகற்றப்பட்டு பாது காப்பாக வைக்கப்ப ட்டுள்ளதாக கூறப்படு கிறது.
விரிவாக்கப் பணிக்காக சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பணி நிறைவு பெற்றதும், அதே இடத்தில் மீண்டும் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும். என கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவள்ளு வர். பற்றாளர்கள் கூறும்போது,
"திருவண்ணாமலை நகரின் அடை யாளமாக கடந்த 25 ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலை இருந்தது. திருவள்ளுவர் தின விழாவில் அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சிலை அகற்றப்பட்டு ள்ளதாக கூறுகின் றனர்.
சிலையை அகற்று வதாகவும், மீண்டும் வருவாய்த் நிறுவப்படும் என நகராட்சிதுறை நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை தரப்பில் தெரிவிக்க வில்லை. அனைத்து செயல்களையும் மறைமு கமாகவே செய்துள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்களின் சிலை அகற்றப்பட்டிருந்தால் கூட்டம் கூடியிருக்கும், எதிர்ப்பு கிளம்பியிருக்கும். திருவள்ளுவருக்கு கூட்டம் கூடவில்லை.
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கோவி ல்களை இடிப்பதை போல் புலவர் திருவள்ளுவர் சிலையும் இடிக்கப்ப ட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலையை அகற்றியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அகற்ற ப்பட்ட திருவள்ளு வர் சிலையின் நிலை தெரி யவில்லை. திருவள்ளு வர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பொது ப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலுவும், மாவட்ட கலெக்டர் பா.முரு கேஷும் உறுதி அளிக்க வேண்டும்" என்றனர்.