search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிருதிஞ்சய"

    • இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
    • உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    அஸ்திவாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 17-ந்தேதி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது. திருவனந்தபுரத்தை சேர்ந்த 4 நம்பூதிரிகள் தேவபிரசன்னம் பார்த்தனர். அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்தது. அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற்காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து மிருதிஞ்சய ஹோமமும் நடந்தது. இந்த ஹோமத்தை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித்சங்கர நாராயணரூ நடத்தினார். அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கன்னி மூலையான வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கோவிலின் தலவிருச்சமான சந்தன மரம் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், கோவில் மேல் சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, நிதின்சங்கர் போற்றி, சீனிவா சன் போற்றி, கண்ணன் போற்றி, முன்னாள் கோவில் களின் கண் காணிப்பாளர் ஜீவா னந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×