என் மலர்
நீங்கள் தேடியது "அதிதூதர் ஆலயம்"
- இரவு 8.30 மணிக்கு அன்பின் சமபந்தி விருந்து நடக்கிறது.
- இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப விழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் அதிகாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, காலை 6 மணிக்கு முன்னோர் நினைவு நன்றித்திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, 6.10 மணிக்கு அருட்பணியாளர் மார்சலின் டிபோரஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். வி.கே.புரம் பங்குதந்தை எட்வர்ட்ராயன் மறையுரையாற்றினார்.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. விழாவில் 29-ந்தேதி காலை 7 மணிக்கு பள்ளவிளை பங்குதந்தை பெஞ்சமின் தலைமை தாங்கி திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு அன்பின் சமபந்தி விருந்து நடக்கிறது.
30-ந்தேதி காலை 7 மணிக்கு கீழ ஆசாரிபள்ளம் பங்குதந்தை அருள்ஜோசப் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். சுங்கா ன்கடை மார்னிங் ஸ்டார் தொழில் நுட்ப கல்லூரி தாளாளர் பிறிம்மஸ்சிங் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு சுங்கா ன்கடை சவேரியார் பொறி யியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆரா தனையை நிறைவேற்று கிறார். கோட்டார் ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெல ஸ்டின் மறையுரை யாற்றுகி றார். இரவு 8.30 மணிக்கு புனிதரின் அல ங்கார தேர்பவனி நடை பெறுகிறது.
விழாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி காலை 8 மணிக்கு மணவிளை பங்குதந்தை ஜாண் பெல்லார்மின் தலைமை தாங்கி பெருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் மரிய வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு புனிதரின் தேர்பவனி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சுதர்சன் மற்றும் பங்கு நிர்வாகிகள், சார்லஸ் இல்ல அருட்சகோதரிகள், பங்கு நிதிக்குழுவினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.