என் மலர்
நீங்கள் தேடியது "எல்.இ.டி .விளக்குகள் பொருத்தும் பணி"
- தெருவிளக்குகளில் டியூப் லைட், சோடியம் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
- மாற்றாக 70 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகள் முக்கிய சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பழனி:
பழனி நகராட்சியில் மின்சார சிக்கனம் மற்றும் செலவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு, முக்கிய சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. அதில் டியூப் லைட், சோடியம் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் நகராட்சிக்கு மின் கட்டணமாக லட்சக்கணக்கான ரூபாய் செலவாகிறது. இது தவிர பராமரிப்பு செலவுகள் உள்ளன. எனவே நகராட்சியின் மின்சார செலவை கட்டுப்படுத்த இந்த விளக்குகளுக்கு மாற்றாக எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்த முடிவு செய்தனர். ரூ.3.25 கோடி செலவில் 3214 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
மேலும் ரூ.38.14 லட்சம் செலவில் புதிதாக மின் கம்பம் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது முதல் கட்டமாக 546 எல்.இ.டி. விளக்குகள் முக்கிய சாலைகளில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. டியூப்லைட், சோடியம் விளக்குகளுக்கு மாற்றாக 70 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகள் முக்கிய சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் பொரு த்தும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் அனைத்து வார்டுகளிலும் உள்ள மின் கம்பத்தில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும். இதனால் நகராட்சியின் மின் கட்டணம் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.