search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நற்கருணை பவனி"

    • காலை 6 மணிக்கு திருவிழா திருப்ப லியும், முதல் திருவிருந்து விழாவும் நடந்தது.
    • பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இது தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கிறிஸ்தவ திருத்த லங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெற்று வந்தது.

    இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம் பர் மாதம் நடைபெற்று வந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் மாற்றி வைக்கப்பட்டது. இருப்பி னும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் தேதிப்படி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா நேற்றுமுன் தினம் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் ஜெபமாலையும், மாலை ஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடந்தது. 2-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு திருவிழா திருப்ப லியும், முதல் திருவிருந்து விழாவும் நடந்தது. பின்னர் மாலையில் நற்கருணை பவனி நடந்தது. இதை யொட்டி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பீடத்தில் இருந்து நற்கரு ணையை திருத்தல அதிபர் பங்குத்தந்தை உபால்டு தலைமையில் அருட்ப ணியாளர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் அந்த நற்கரு ணையை திருத்தலத்தின் முன்பு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்டிருந்த ரதத்தில் வைத்து வீதிகளில் பேண்ட் இசை முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். திருத்த லத்தின் முன்பு இருந்து புறப்பட்ட இந்த நற்கருணை பவனி ராஜசங்கீததெரு, ஜோசப் தெரு, சன்னதி தெரு, ரட்சகர் தெரு, அலங்கார மாதா தெரு வழியாக மீண்டும் திருத்தல முற்றத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பல வண்ண மலர்களால் கோலமிட்டு நற்கருணை பவனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நற்கருணை பவனியில் அருட்பணியா ளர்கள், பங்குமக்கள், அன்பியங்களை சேர்ந்த வர்கள், பக்த சபையினர், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் திரளாக கலந்துகொண்டனர். இறுதியாக மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடந்தது.

    இதில் குளச்சல் வட்டார முதல்வர் கிளைட்டன் தலைமையில் அருட்பணி யாளர் மெர்லின், திருத்தலஅதிபர் உபால்டு, இணை பங்குத்தந்தையர்கள் நிக்சன், ஆன்றோ ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றி னார்கள். இதில் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர் உபால்டு, பங்குப்பேரவை துணை தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் இணை பங்குதந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    ×