என் மலர்
முகப்பு » கடைக்குள் புகுந்த சாரை பாம்பு
நீங்கள் தேடியது "கடைக்குள் புகுந்த சாரை பாம்பு"
- கடைக்காரர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்
- ஆற்றங்கரையில் கொண்டு விடப்பட்டது
ஆலங்காயம்:
வாணியம்பாடி கச்சேரி சாலையில் சக்தி (வயது 30), என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, கடைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்டு அதிச்சடைந்த சக்தி கூச்சலிட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்.
இதனைப் பார்த்த பக்கத்துக் கடைக்காரர்கள், பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாம்பு பிடிக்கும் நபர் விரைந்து சென்று, கடைக்குள் பதுங்கியிருந்த மஞ்சள் நிற சாரை பாம்பை பிடித்து ஆற்றங்கரையில் கொண்டு சென்று விட்டார்.
×
X