என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்கி கணக்கில் பணம்"
- செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி துணிகரம்
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவரது மகள் நபிஷா குல்சும் (வயது 23) கடந்த ஏப்ரல் 28-ந் தேதி இவரது செல்போனுக்கு, பகுதி நேர வேலை உள்ளதாகவும், அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே தினசரி பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவலுடன் ஒரு குறுந்தகவல் வந்தது.
இதை உண்மை என நம்பிய நபிஷா குல்சும் அந்த 'குறுந்தகவலில்' தனது சுயவிவரங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளித்துள்ளார்.
அதன்பின் அவரது செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் லிங்குகளை அனுப்பி அந்த ஓட்டல்களின் தரம் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தர மதிப்பெண் கொடுத்தால் ரூ.100 முதல் ரூ.190 வரை தினசரி பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, நபிஷா குல்சும் ஸ்டார் மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். அதில், அவருக்கு ரூ.100 தொடங்கி ரூ.10 ஆயிரம் வரை பணம் வந்தது. இதனால், அவர் மகிழ்ச்சியடைந்தார்.
குறுந்தகவல் அனுப்பி மோசடி
இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் ஒரு குறுந்தகவலை அனுப்பி அதில் உள்ள வங்கி கணக்குக்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக மோசடி நபர்கள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, நபிஷா குல்சும் அடுத்தடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார்.
ஆனால், கூடுதல் பணம் வரவில்லை. இதையடுத்து, நபிஷா குல்சும் அந்த நபர்களுக்கு மெசேஜ் மூலம் பதில் கேட்டுள்ளார். அதற்கு, அவர்கள் இன்னும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
சைபர் கிரைம் போலீசில் புகார்
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபிஷா குல்சும் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து `ஆன்லைன்' மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.