search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலை மோதிய மக்கள் கூட்டம்"

    • ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.
    • பஸ்சுக்காக காத்திருந்த சில பயணிகளிடம் பணத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

    ஈரோடு:

    மிலாது நபி, சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் அதைத் தொடர்ந்து காந்தி ஜெயந்தி விழா என அடுத்தடுத்து 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

    இதேப்போல் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்று பள்ளிகளுக்கும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து சொந்த ஊர் செல்வதற்காக ஒரே நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதலே கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவு நேரங்களில் தொலைதூரம் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    குறிப்பாக திருச்சி, மதுரை, சென்னை செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேப்போல் கரூர், சேலம், கோவை செல்லும் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொலைதூரம் பயணம் செய்யும் மக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். மற்றவர்கள் பஸ்களில் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பயணிகளிடம் பர்ஸ் மற்றும் பணத்தை திருடி சென்று விட்டனர். நேற்று மாலை பஸ்சுக்காக காத்திருந்த சில பயணிகளிடம் பணத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

    கூட்ட நெரிசலில் பஸ்சில் ஏறும்போது கைவரிசையை காட்டி விடுகின்றனர். போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாலும் இது போன்ற சில சம்பவங்கள் நடந்து விடுகிறது.

    எனவே ஈரோடு பஸ் நிலைய ங்களில் தேவையின்றி சுற்றும் நபர்களை பிடித்து விசா ரணை நடத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் ஈரோடு ெரயில் நிலையங்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    குறிப்பாக சென்னை செல்லும் ெரயில்கள், திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் ெரயில்களில் முன் பதிவு பெட்டிகள் நிரம்பிய நிலையில் முன்பதிவு இல்லாத பொதுப் ெபட்டிகளில் இடம் பிடிக்க மக்களிடம் கடும் போட்டி நிலவியது.

    ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட வர்கள் ரெயில் நிலையத்தில் வந்ததால் ெரயில் நிலையம் பரபரப்பாக காணப்ப ட்டது. இதில் சில பயணிகளிடம் செல்போன் திருடி சம்பவம் நடந்துள்ளது.

    ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது.

    பொதுமக்கள் விடுமுறையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர்.

    ×