search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்தி 2023 கருத்தரங்கம்"

    • இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை ஏற்றார்.
    • பெண் விஞ்ஞானி ராஜலட்சுமி மேனன் துவக்கி வைத்தார்.

    மாமல்லபுரம்:

    "இஷ்ரே" என்கின்ற இந்திய வெப்பப்படுத்துதல், குளிர்வித்தல் பொறியாளர்கள் கூட்டமைப்பின் கல்பாக்கம் பிரிவு, இந்திய பெண் விஞ்ஞானிகள் சங்கம் மற்றும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து கல்பாக்கத்தில் சக்தி-2023 என்ற கருத்தரங்கை நடத்தியது.

    இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை ஏற்றார். பெண் விஞ்ஞானி ராஜலட்சுமி மேனன் துவக்கி வைத்தார். "இஷ்ரே" அமைப்பின் தேசிய தலைவர் யோகேஷ் தக்கர், சுற்றுச்சூழல் சுகாதார பொறியியல் துறை தலைவர் கல்பனா மற்றும் 300 பெண் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

    பசுமை தொழில்நுட்ப ஆராய்ச்சி, பாதுகாப்பு ஆராய்ச்சி, வனப்பகுதியின் வான்வழி பாதுகாப்பு, 2070ம் ஆண்டிற்குள் கார்பனை முற்றிலும் குறைப்பது, காற்றின் மாசுபாட்டை கண்காணித்து அதை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய ஆய்வுகள், திட்டங்கள் குறித்து கருத்தரங்கில் பெண் விஞ்ஞானிகள் பேசினார்கள்.

    ×