search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிற்றார் 1-ல்"

    • குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்,செப்.29-

    குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அதன்பிறகு மழை பெய்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குடை பிடித்தவாறு சென்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டுகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாசன குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. பாசன குளங்களிலும், அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை யடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 21.75 அடியாக உள்ளது. அணைக்கு 596 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 586 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.

    அணைக்கு 237 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வந்த பிறகும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாகவே இருந்து வருகிறது.

    அணை நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 16.20 அடியாக இருந்தது. நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க புத்தன் அணை தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை மில்லி மீட்ட ரில் வருமாறு:-பேச்சிப் பாறை 16.8, பெருஞ்சாணி 11.2, சிற்றார் 1-30, சிற்றார் 2-10.4, பூதப்பாண்டி 13.4, களியல் 12, கன்னிமார் 9.4, கொட்டாரம் 11.6, குழித்துறை 15.6, மயிலாடி 16.2, நாகர்கோவில் 8.2, புத்தன் அணை 9, சுருளோடு 17.2, தக்கலை 19, குளச்சல் 16, இரணியல் 12.4, பாலமோர் 23.4, மாம்பழத்துறையாறு 24, திற்பரப்பு 21.5, கோழிப்போர்விளை 15.2, அடையாமடை 10.2, குருந்தன்கோடு 20, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 21.4.

    ×