search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகிய மண்டபம்"

    • நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுகிறது.

    இரணியல்:

    திங்கள்நகர்-நெய்யூர்-அழகிய மண்டபம் செல்லும் சாலையில் இரட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுவதால் இரட்டை ரெயில்வே மேம்பால பணிகள் நடை பெறும் இடத்தை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் கடந்த 26-ந்தேதி பார்வை யிட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்லவும் பணிகளை சுமார் 40 நாட்களில் விரைந்து முடிக்கவும் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், ரெயில்வே துணை முதன்மை பொறியாளர் பமிலா, குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    இந்நிலையில் நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, திங்கள் நகரில் இருந்து திருவிதாங்கோடு, அழகிய மண்டபம் செல்லும் வாகனங்கள் திங்கள்நகர் ரவுண்டானா, இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில், தக்கலை வழியாகவும், அழகிய மண்டபம், திரு விதாங்கோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் வாகனங்கள் திரு விதாங்கோடு, வட்டம், ஆழ்வார் கோவில், இரணி யல் சந்திப்பு திங்கள் நகர் வழியாகவும் செல்லும்படி ஒருவழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்ப டுகிறது. ஆகவே பொது மக்கள் போக்குவரத்து காவல்துறைக்கும், ரெயில்வே நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து மாற்று பாதையில் செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×