search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருதுநகர் கலெக்டர்"

    • போட்டி தேர்வுகளில் பங்கேற்பது மாணவர்கள் தங்களின் திறனை அறிந்து கொள்ள உதவும் என்று விருதுநகர் கலெக்டர் கூறினார்.
    • மாவட்ட கல்வி அலுவலர் வீரபாண்டிய ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனறிவு தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். வைத்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கையேட்டினை அவர் வெளியிட்டார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:

    அரசுப்பள்ளிகளில் 11 -ம் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனறி தேர்வு மிக சிறப்பான திட்டமாகும். இந்த தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாதம் ரூ.1000 வீதம் இளங்கலை பட்ட படிப்பு வரை தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

    இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர் களில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் உள்ள 15 அரசு மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 16 அரசு மேல்நிலை பள்ளி களைச் சேர்ந்த 150 மாணவர்கள் என மொத்தம் 300 மாணவர்களுக்கு கடந்த 2 மாதமாக சனி, ஞாயிறு நாட்களில் பயிற்சி வகுப்பு நடைபெற்று வந்தது.

    தற்போது இத்தேர்விற்கு, 29.09.2023 முதல் 01.10.2023 வரை 3 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போட்டி தேர்வில் பங்கு பெறுவது என்பது இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் திறனை அறிந்து கொள்ளவும், அனைத்து போட்டி தேர்வுகளில் பயமின்றி பங்கு பெற்று வெற்றி பெறவும் முடியும். வெற்றி பெறுவதில் மூலம் கிடைக்கும் உதவி தொகை நிதிசுமையை குறைக்கும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் வீரபாண்டிய ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×