என் மலர்
நீங்கள் தேடியது "வேளாண் தொழில்நுட்பம்"
- விவசாயிகள் தொழில்நுட்ப பயிற்சி ஏ.பி. நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் என்ற அழகுதுரை தலைமையில் நடைபெற்றது.
- பிசான பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் ரகங்கள் பற்றி ஏஞ்சலின் பொன்ராணி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
கடையம்:
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு - விவசாயிகள் தொழில்நுட்ப பயிற்சி கடையம் வட்டாரத்தில் ஏ.பி. நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் என்ற அழகுதுரை தலைமையில் நடைபெற்றது. கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி முன்னிலை வகித்தார். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார். வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி பிசான பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் ரகங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். பயிற்சியின் முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் தீபா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர், உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.