என் மலர்
நீங்கள் தேடியது "மதுவிற்ற 3 பேர் கைது"
- அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
- அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அம்மாபேட்டை, பங்களாபுதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.
அப்போது கொங்கர்பா ளையம், கணக்கம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த அந்தி யூர் ஏ.டி. காலனியை சேர்ந்த சாமிதுரை மகன் உத்தரசாமி (வயது 44),
கொங்கர்பா ளையம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த ராக்கன் மகன் கிட்டன் (55), கோபி செட்டிபாளையம் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பெரிய தம்பி மகன் ரவி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைபோல் கோபி குப்பமேடு டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த திரு ப்பூர் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அஜய்குமார் (25) என்பவர் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.