என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புஸ்சி ஆனந்த்"

    • கட்சி சார்பில் அவருக்கு உதவும்படி விஜய் உத்தரவிட்டார்.
    • ரிஸ்வான், புஷ்பராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் புதிய ‘தேநீர் விடுதி’ அமைத்து கொடுத்தனர்.

    சென்னை:

    சென்னை முடிச்சூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் பனையூரில் அலுவலக உள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு நேரில் வந்து தனது வாழ்வாதாரத்திற்கு உதவும் படி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்திடம் கோரிக்கை அளித்தார். லட்சுமி கோரிக்கையை கட்சி தலைவர் விஜய் கவனத்துக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் கொண்டு சென்றார். இதையடுத்து கட்சி சார்பில் அவருக்கு உதவும்படி விஜய் உத்தரவிட்டார்.

    விஜய் உத்தரவுக்கிணங்க ஏழைப் பெண்ணான லட்சுமிக்கு முடிச்சூர் பகுதி நிர்வாகிகள் தயா, ரிஸ்வான், புஷ்பராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் புதிய 'தேநீர் விடுதி' அமைத்து கொடுத்தனர். புதிய கடையை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இ.சி.ஆர். சரவணன் உள்பட செங்கல்பட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வேங்கடமங்கலம் ஊராட்சி ரத்தின மங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு 52 பிளாஸ்டிக் சேர்கள், 10 பாய், 3 குக்கர், 50 சில்வர் தட்டு, 30 லஞ்ச் பேக், 2 குப்பை கூடை, 2 வாளி, 2 தண்ணீர் கேன், குழந்தைகளுக்கு பிஸ்கட், இனிப்பு போன்ற பொருட்களை கட்சி சார்பில் பொதுச் செயலாளர் ஆனந்த் வழங்கினார்.

    திருப்போரூர் ஒன்றிய த.வெ.க. சார்பில் நிர்வாகிகள் வி.கே.ஆர்.எஸ். தியாகு, தீனா ஆகியோர் ஏற்பாட்டில் மேலைக் கோட்டூரில் அமைந்துள்ள மேகநாதன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 150 பெண்களுக்கு புடவை, சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கடலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புருஷோத்தமன் நகரில் ஃபெஞ்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், ராஜ்குமார் ஏற்பாட்டில் அரிசி, காய்கறிகள், போர்வை ஆகிய பொருட்களை வீடு வீடாக சென்று நிவாரண பொருட்கள் வழங்கினார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளன.
    • நாம் அனைவரும் ஒன்று பட்டு பணியாற்றி அவருக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் பற்றி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அனைத்து கூட்டங்களிலும் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆரணி, போளூர், வந்தவாசி, கலசப்பாக்கம், கிழ்பெண்ணாத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை நிலையச் செயலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் உதயகுமார், சத்யா மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளன. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து இரவு பகல் பாராமல் அயராது உழைத்து கட்சித் தலைவர் விஜய்யை தமிழகத்தின் முதல்வராக ஆக்குவோம்.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் சுட்டிக்காட்டிய அனைத்து வேட்பாளர்களையும் நாம் அனைவரும் ஒன்று பட்டு பணியாற்றி அவருக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்து பணிகளிலும் கட்சி தோழர்கள் தீவிரமாக பணியாற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    கட்சித் தலைவர் விஜய் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதோடு மக்கள் பணிகளையும் எப்போதும் போல் சிறப்பான முறையில் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.
    • கட்சியின் கொள்கைகள் குறித்தும் மட்டுமே பேச வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அரசியல் பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் பங்கேற்று தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

    மக்கள் பணிகளிலும் கட்சி பணிகளிலும் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து கட்சி தலைவர் விஜய்யை முதல் வராக்குவதே நமது லட்சியம் என தொண்டர்கள் மத்தியில் புஸ்சி ஆனந்த் பேசினார்.

    இந்த நிலையில் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    உத்தரவில் தங்கள் மாவட்டங்களில் தாங்களும், தங்களுக்குக் கீழ் உள்ள கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளிலும், கழக நிர்வாகிகள் மேடையில் மைக்கில் பேசும் போது நம் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதி வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் நம் கட்சியின் கொள்கைகள் குறித்தும் மட்டுமே பேச வேண்டும்.

    எக்காரணத்தை கொண்டும் அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் மேடையிலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் மற்றவர்களை சுட்டிக்காட்டி அரசியல் பேசுவதையோ அல்லது மற்றவர்களை தாக்குவதை போல பேசுவதையோ தவிர்க்க வேண்டும்.

    நம் கழக நிர்வாகிகள், தோழர்கள் எந்த மேடையில் பேசினாலும் அது மக்களின் பிரச்சினைகள் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பேச வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.!

    இவ்வாறு நிர்வாகி களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
    • திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சி தலைவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தி தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.

    தமிழக வெற்றிக்கழகம் பெயரை கழகத் தலைவர் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்க ளுக்கு பாராட்டு சான்று மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா என தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

    இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக்க ழகத்தின் ஆதரவாளர்களாக சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக்கழகத் தலைவரால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலைய செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகாரப்பூர்வ கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனவே அதிகாரப் பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளை தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×