search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2.0 திட்ட விழிப்புணர்வு"

    • தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை சேவை 2023 என்ற ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 12 இடங்களில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், வீட்டு வாசல் முன்பு ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை சேவை 2023 என்ற ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 12 இடங்களில் நடைபெற்றது.

    இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் 2- வது வார்டு ஈ.வே.ரா சாலை, அசோக் நகர் பகுதியில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் வீடு வீடாக சென்று பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், வீட்டு வாசல் முன்பு ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முன்னதாக ஆர்.எம். காலனி உள்ள அம்ருத் பூங்காவில் நடைபெற்ற டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஆனந்த், ஜான் பீட்டர், கவுன்சிலர் கணேசன், பொறியாளர் சுப்பிரமணியன், மாநகர் நல அலுவலர்கள் முத்துக்குமார், செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி பாலமுருகன் முகமது அனிபா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×