search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிம்சை தினம்"

    • இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி மனித வாழ்வுக்கு ஓர் இலக்கணமாக திகழ்ந்தார்
    • மையச் சிந்தனையின் அடிப்படையில் கவிதை, நோக்கவுரை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலை வகித்தனர்.

    இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி மனித வாழ்வுக்கு ஓர் இலக்கணமாக திகழ்ந்தார் என்னும் மையச் சிந்தனையின் அடிப்படையில் கவிதை, நோக்கவுரை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

    மேலும் மழலையர்கள் காந்தியடிகள் போன்று வேடமணிந்து வந்திருந்தனர். மேல்வகுப்பு மாணாக்கர்களில் சிலர் மகாத்மா காந்தியடிகள் போன்று வேடமணிந்து அவரின் கொள்கைகளை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது. அதில் சிறப்பாக பங்களித்த மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×