என் மலர்
நீங்கள் தேடியது "கொல்லங்கோடு - ஊரம்பு"
- மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.
- மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு - ஊரம்பு சாலையில் சிலுவை புரம் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஒரு மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்ப டுத்தும் பணியை மேற் கொண்டனர். மேலும் இது குறித்து மின்வாரிய அலுவல கத்திற்கும் தகவல் கொடுக் கப்பட்டது. மின் ஊழியர் களும் சம்பவ இடத்திற்கு வந்து மின்சார கம்பியை சரி செய்தனர். எனினும் சாலை யின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.