search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5-வது நாளாக போராட்டம்"

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கனரக வாகனம் மற்றும் வேளாண்மை உபகரண ங்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • 5 நாட்களாக தொடர் விடுமுறை எடுத்து அலுவலக பணியை புறக்கணித்து போராடி வருவதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கனரக வாகனம் மற்றும் வேளாண்மை உபகரண ங்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர் சங்கத்தினர் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை பகுதியிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை டாக்பியா சங்கம் ஒன்றிய செயலாளர் மதிவாணன் கூறுகையில்,

    திருச்சியில் நடந்த சங்க மாநாட்டில் முடிவுகளின் படி கடந்த 5 நாட்களாக தொடர் விடுமுறை எடுத்து அலுவலக பணியை புறக்கணித்து போராடி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. எனவே வருகிற 9ம் தேதிமுதல் போராட்ட த்தை தீவிரபடுத்த உள்ளோம். நெல்லை, மதுரை, திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, வேலூர் என தமிழகத்தில் உள்ள 7 மண்டலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இதில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் இ-சேவை மைய பணிகள் பாதிக்க ப்பட்டது.

    ×