search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "300 கிலோ விதைகள்"

    • மொடக்குறிச்சி வட்டாரதில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விவசாயிகள் தேர்வு செய்து விதைகளை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஈரோடு:

    நல்ல தரமான விதைகள் மட்டுமே நல் விளைச்சலுக்கு ஆதாரம். தரமான விதைகள் விவசாயிகளுக்கு சென்ற டைய வேண்டும் என்ற அடிப்படையில் ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி மொடக்குறிச்சி வட்டாரதில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது விதை விற்பனை நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், விதைஇருப்பு, விதைக் கொள்முதல் பட்டியல்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை பட்டியல்கள், விலைப்பட்டி யல் பலகை, முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கைகள், விற்பனை அனுமதிச்சான்று நகல்கள், விதை விற்பனை உரிமங்கள் போன்ற அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யபட்டது

    இந்த ஆய்வின் முடிவில் விதைச்சட்டம் 1966 கீழ் வீதிமீறல் காணப்பட்ட காரணத்தால் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,300 கிலோ விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.82,660 ஆகும்.

    இது குறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    விவசாயிகள் விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே விதை களை வாங்க வேண்டும் எனவும், விதைகள் வாங்கும் போது தவறாமல் விற்பனை பட்டி யல் கேட்டு பெறவேண்டும்.

    மேலும் காலாவதி தேதி, விதை குவியல் எண் போன்ற விவரங்கள் கவனித்து வாங்க வேண்டும்.

    மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யால் பரிந்துரைக்ப்பட்ட பருவத்திற்கேற்ற பகுதிக்கேற்ற ரகங்கலையே விவசாயிகள் தேர்வு செய்து விதைகளை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது ஈரோடு விதை ஆய்வாளர் நவீன் உடனிருந்தார்.

    ×