search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் ஹமஸ் போர்"

    • இஸ்ரேல் மற்றும் ஹமஸ் அமைப்பு இடையே பயங்கர மோதல்.
    • ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்.

    டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்-க்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி வரும் தாக்குதலால் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    வழக்கமாக திங்கள் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழன் கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என வாரத்திற்கு ஐந்து முறை இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    டெல்லியில் இருந்து டெல் அவிவ்-க்கு செல்லும் ஏர் இந்தியாவின் ஏ.ஐ. 139 விமானமும், டெல் அவிவ்-இல் இருந்து டெல்லி வரும் ஏ.ஐ. 140 விமானமும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் நலன் கருதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    காசா எல்லை பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹமஸ், இன்று இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலால் இஸ்ரேலில் போர் துவங்கி இருக்கிறது. போர் காரணமாக நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    • இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு ஏவுகணை தாக்குதல்.
    • ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.

    காசா எல்லையில் உள்ள ஹமஸ், சில பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் இணைந்து இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின.

    சற்றும் எதிர்பாராத நேரத்தில் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிக ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதுதவிர இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்த ஹமஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

     

    இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் என்றும், 908 பேர் படுகாயம் அடைந்தது இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திடீர் தாக்குதலை தொடர்ந்து ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 1,600-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இஸ்ரேல் அரசும் ராணுவத்தை களமிறக்கி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    ஆபரேஷன் அக்சா ஃபிளட் என்ற பெயரில், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுத குழுக்கள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. மிக கொடூரமான தாக்குதலோடு, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளுக்குள் ஹமஸ் ஆயுதக்குழு நுழைந்து துப்பக்கிச்சூடு நடத்தி வருகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அரசும் தனது ராணுவத்தை களமிறக்கி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் துவங்கிவிட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்துவிட்டது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்றில், காசா மற்றும் இஸ்ரேல் இடையேயான தடுப்பு வேலி தகர்க்கப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதோடு ரத்த காயங்களுடன் பெண் ஒருவரை ஹமஸ் பயங்கரவாதிகள் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஹமஸ் தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேல் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 170-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்து இருக்கிறது. 

    • இஸ்ரேல் நாட்டில் போர் காரணமாக அவசர நிலை ஏற்பட்டு உள்ளது.
    • இஸ்ரேல் ராணுவம்-ஹமஸ் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமஸ் பயங்கரவாத அமைப்பு இடையே போர் துவங்கியுள்ளது. இருதரப்பும் மாறி மாறி ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்தது.

    இந்த நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாடு அரசை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    +91-87602 48625

    +91-99402 56444

    +91-96000 23645

    nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது. 

    • உள்ளூர் அதிகாரிகள் விடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    • பாதுகாப்பு உறைவிடங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும்.

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமஸ் பயங்கரவாத அமைப்பு இடையே போர் துவங்கியுள்ளது. இருதரப்பும் மாறி மாறி ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

    இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிக்கையில், "இஸ்ரேல் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில், இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் விடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் கவனமாகவும், தேவையற்ற நடமாட்டங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு உறைவிடங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

     

    "கூடுதல் விவரங்களுக்கு, இஸ்ரேலி ஹோம் ஃபிரண்ட் கமாண்ட் வலைதளம் https://www.oref.org.il/en அல்லது தயார்நிலை கையேடை பாருங்கள். அவசர உதவிக்கு எங்களை +97235226748 என்ற எண்ணிற்கோ அல்லது consl.telaviv@mea.gov.in என்ற இணைய முகவரியிலோ தகவல் தெரிவிக்கலாம். தூதரக அதிகாரி இதர தகவல்களை வழங்க எப்போதும் தயார் நிலையில் இருப்பார்," என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • ஹமஸ் இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும்.
    • ஹமஸ்-ஐ அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது.

    பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது இன்று மிக கொடூரமான தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, போர் துவங்கிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.

    "இஸ்ரேல் குடிமக்களே, நாம் போரில் இருக்கிறோம். இது கூட்டு முயற்சியோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கையோ இல்லை. இது போர். ஹமாஸ் இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். எதிரிகள் இதுவரை சந்திக்காத பதிலடியை சந்திக்க உள்ளனர்," என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து உள்ளார்.

     

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதல்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு வங்கி பகுதிகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    காசாவில் ஆட்சி செய்து வரும் ஹமஸ்-ஐ அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது. தாக்குதலுக்கு முன்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக ஹமஸ் அறிவித்து இருந்தது. ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசு காசாவில் தாக்குதல் நடத்த போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.

    திடீர் தாக்குதல் மற்றும் போர் காரணமாக சிம்சாட் தோரா விடுமுறை தினத்திலும் சைரன் மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் அப்பகுதி முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

    வெடிகுண்டு தாக்குதல் ஒருபுறமும், மற்றொரு புறம் மோட்டார்சைக்கிள் மற்றும் பாராகிளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் புகுந்த காசா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்ரேல் படையினர் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

    ×