search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடிப்படை போலீஸ்"

    • மாவோயிஸ்டு கும்பல், வயநாடு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • வனத்தையொட்டி அமைந்து உள்ள கிராமப்ப குதிகளிலும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவர்கள் கண்ணணூர் மாவட்டத்தில் கரிக்கோட்டுக்கரி, ஆரளம் மற்றும் வயநாடு மாவட்டத்தில் தலப்புழா, தொண்டர்நாடு உள்ளிட்ட 32 பகுதிகளில் அடர்ந்த காட்டுக்குள் ரகசிய முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக கேரளாவை சேர்ந்த மொய்தீன் என்பவர் தலைமையிலான மாவோயிஸ்டு கும்பல், வயநாடு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    கேரளாவில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை கைது செய்யும் பணிகளில் அதிரடிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்தை சேர்ந்த அனீஸ்பாபு, கார்த்திக், சந்தோஷ் உள்பட 6 பேர், மாவோயிஸ்டுகளுடன் இணைந்து செயல்படுவது கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கேரள அதிரடிப்படை போலீசார் தற்போது மாவோயிஸ்டுகளில் 20 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். இதுகுறித்து அதிரடிப்படை அதிகாரிகள் கூறகையில், கேரளாவில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணிநேரமும் வாகன தணிக்கைப்பணிகள் நடந்துவருகிறது. இதுதவிர வனத்தையொட்டி அமைந்து உள்ள கிராமப்ப குதிகளிலும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    கேரளாவில் பதுங்கியிருந்து நாச வேலைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளில் 20 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. எனவே அவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக அதிரடிப்படை போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்வோருக்கு அரசு சார்பில் தகுந்த சன்மானம் வழங்கப்படும். மேலும் தகவல் கொடுப்பவர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.

    ×