என் மலர்
முகப்பு » நெடுந்தூர ஓட்டம் போட்டி
நீங்கள் தேடியது "நெடுந்தூர ஓட்டம் போட்டி"
- 441 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்
- முதல் பரிசாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது
வேங்கிக்கால்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற்றது. 17 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான ஓட்டப் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 441 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 2 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன் வழங்கினார்.
பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் சண்முகப்பிரியா, உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
×
X