என் மலர்
நீங்கள் தேடியது "பொற்றையடி"
- விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
- நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார்.
என்.ஜி.ஓ.காலனி:
பொற்றையடியில் இருந்து இலந்தையடி விளை தலக்குளம் வரை 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெங்கலராஜன் கோட்டை சானல் உள்ளது. இது வடக்கு தாமரைகுளம், கரும்பாட்டூர் மற்றும் சாமிதோப்பு ஆகிய 3 ஊராட்சிகள், தென்தாமரைகுளம் பேரூராட்சி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிகளுக்குட்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதிக்காகவும், விவசாய பயன்பாட்டுக்காகவும் பேச்சிப்பாறை அணையில் இருந்து பொற்றையடி வழியாக தலக்குளம் வந்தடைகிறது.
இந்த வெங்கலராஜன் கோட்டை சானலில் சில பகுதிகளில் ஆகாயத்தாமரை மற்றும் பாசிகள், செடி, கொடிகள் அடைந்து தண்ணீர் வருவதற்கு இடையூறாக காணப்பட்டது. இந்த பாசிகளை அகற்றும் பணிகளை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கடற்படை பிரிவை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தூய்மைப்படுத்தினர். இப்பாசிகளை அகற்றும் நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார். விவேகானந்தா கல்லூரியின் கடற்படைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரபு மாறச்சன் தலைமை தாங்கினார். இதில் கங்காதரன், மணிக்கண்ணன், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.