search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓஎன்ஜிசி"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல.
    • தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஓஎன்ஜிசி-யின் செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டும்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக இந்த திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், பெருமளவு விவசாய நிலங்களும் பாதிப்படைவதை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு எனது தலைமையிலான கடந்த அம்மா அரசில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அத்தகைய நச்சுத் திட்டங்களால் தமிழகம் ஒருபோதும் பாதிப்படையா வண்ணம் முற்றுப்புள்ளி வைத்தேன்.

    இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல.

    இன்றைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அவர்களது முந்தைய ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, படித்துபார்க்காமல் கையெழுத்திட்டுவிட்டேன் என பின்னர் மாற்றிக்கூறிய வரலாறு உண்டு. ஆகவே கடந்த காலத்தை போல முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ள கூடாதெனவும், தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஓஎன்ஜிசி-யின் இந்த செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டுமெனவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

    • ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

    மன்னார்குடி:

    தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுத்தி வந்தது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி, பெரியக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து இருந்தது. இதில் ஒரு கிணற்றில் கடந்த 2013-ம் ஆண்டு அதிக அழுத்தம் காரணமாக கியாஸ் வெளியேறியது.

    இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து இந்த எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டது.

    இந்நிலையில் பெரியக்குடி கிராமத்தில் மூடப்பட்ட ஒரு எண்ணெய் கிணற்றில் இருந்து நேற்று காலை திடீரென அதிகளவில் கியாஸ் கசிந்தது. தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியது. அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அதிகளவில் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியதால் கிராமமக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர்.

    எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் ஆயில் மற்றும் கியாஸ் எதுவும் வெளியாக வில்லை எனவும் காற்று மட்டுமே வருகிறதாகவும் தெரிவித்தனர்.

    மேலும், இதனை இன்னும் 2 நாட்களில் நிறுத்தி விடுவோம் என தெரிவித்தனர்.

    ×