என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பவுன் நகை"
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தெற்கு வீதியில் வசிப்பவர் பழனி (வயது 42). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலையில் உள்ள மாமியார் வீட்டிற்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றார்.இவரது வீட்டின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு இன்று காலை சென்றவர்கள், பழனி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பழனிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் திரு வண்ணாமலையில் இருந்து ஏனாதிமங்கலத்திற்கு பழனி விரைந்து வந்தார். மேலும், திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசாருடன் வீட்டிற்குள் சென்ற பழனி, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார்.
மேலும், வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐந்தரை பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் செல்வராஜ் தலைமை யிலான குழுவினரும், மோப்ப நாய் ராக்கியும் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் ராக்கி யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும், கைரேகை நிபுணர்கள் வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர்.மேலும், பழனி வீட்டருகே உள்ள மேலும், 2 வீடுகளின் பின்பக்க கதவினை உடைக்கவும் கொள்ளையர் முயற்சித்துள்ளனர். கதவை உடைக்க முடியாததால், அந்த வீடுகளில் திருட்டு சம்பவம் ஏதும் நடக்கவில்லை.காய்கறி வியாபாரி பழனி, வீட்டினை பூட்டிவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட் டின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்தின் வழி யாக வந்து, கதவினை உடைத்து ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித் திருக்கலாம் என்ற கோணத் தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொள்ளை சம்பவம், அருகில் இருந்த 2 வீடுகளில் திருட முயற்சி ஆகிய சம்பவங்கள் ஏனாதி மங்கலம் கிராம மக்களி டையே அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பெரி யார்நகரை சேர்ந்தவர் ஜம்பு (என்கிற) ஜம்புலிங்கம் (வயது 50). இவர் ரெயில்வேயில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சியில் நடைபெறும் பயிற்சிக்காக சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழைந்தைகள் விழுப்புரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். வீட்டின் மேல்புறம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று இரவு ஜம்புலிங்கத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்புறம் வந்த மர்மநபர்கள் கடப்பாறையினால் கதவை உடைத்துள்ளனர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
இது குறித்து விழுப்புரம் நகர போலீசாரிடம் இன்று காலை புகாரளித்தனர். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும், மோப்பநாயும் வர வழைக்கப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவு, பீரோவில் இருந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி களில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குடியிறுப்புகள் நிறைந்த பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை
- அனு பிரியா தனது கணவருக்கு தெரியாமல் 20 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது
தக்கலை :
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி அனுபிரியா (வயது 32). அழகு கலைஞரான இவருக்கு திருவிதாங்கோடு பகுதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வரும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்தப் பெண், மற்றொரு அழகு நிலையம் தொடங்குவதாக கூறி ரூ. 5 லட்சம் கேட்டாராம். இதனால் அனு பிரியா தனது கணவருக்கு தெரியாமல் 20 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தப் பெண் நகையை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அது கவரிங் நகை என அறிந்த அனுப்பிரியா, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் 5 மாதமாக அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அனுபிரியா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்