என் மலர்
நீங்கள் தேடியது "சுகாதாரக் கேடு"
- குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் மனு
- 45-வது வார்டில் அமைந்துள்ள பிராய்லர் கோழிப்பண்ணையால் சுகாதாரக்கேடு
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து, தங்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மனு கொடுக்க வந்தவர்களை, கலெக்டர் அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே மனு கொடுக்க அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். பழவிளை அருகே உள்ள மறுகால்தலைவிளை பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், நாகர்கோவில் மாநகராட்சி 45-வது வார்டில் அமைந்துள்ள பிராய்லர் கோழிப்பண்ணையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம், ஈக்கள் தொல்லை போன்றவற்றால் மக்கள் அவதிப்படுவதால், அதனை மாற்ற வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. மழைக்காலங்களில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டதால் பிராய்லர் பண்ணைகளைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் கணேசன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குமரி மண்டல தலைவர் அன்புகிருஷ்ணன், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.