என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசுத்தமான குடிநீர்"

    • கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.
    • முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன் தெரு , பணிக்கன் தெரு, காமாட்சிஅம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் உறையூர் பகுதியில் பதட்டமும் பரபரப்பும் உண்டானது. அந்தப் பகுதி மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்தவாறு நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாசுபட்ட குடிநீர் காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவதற்கு மாநகராட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனினும் அப்பகுதியில் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தெரிவித்து உள்ளார்.

    மேலும், குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • அசுத்தமான குடிநீரில் ஹெலிகோபாக்டர் பைலோரி கிருமி இருக்கும்.
    • இரைப்பை புற்றுநோயை தூண்டும்.

    இரைப்பை புண் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. `ஹெலிகோபாக்டர் பைலோரி' எனும் பாக்டீரியா கிருமி காரணமாக இரைப்பை புண் ஏற்படுவதுதான், தற்காலத்தில் அதிகம். அசுத்தமான குடிநீரில் இந்த கிருமி இருக்கும். அதைக் குடிப்பவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது பல வருடங்களுக்கு இரைப்பையில் வாழும். இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பை புற்றுநோயை தூண்டும்.

    மற்றவர்களைவிட இந்த கிருமித்தொற்று இருப்பவர்களுக்கு, இரைப்பையில் புற்றுநோய் வருவதற்கு 6 மடங்கு வாய்ப்பு அதிகமாம். அடிக்கடி இரைப்பை புண் தொல்லை கொடுத்தால், ஒருமுறை 'எண்டோஸ்கோபி' பரிசோதனை செய்து, 'ஹெலிகோபாக்டர் பைலோரி' கிருமி இருக்கிறதா என்பதை உறுதி செய்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த புற்றுநோயை தடுத்துவிடலாம்.

    ஹெப்படைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்கள் கல்லீரலை தாக்கும்போது முதலில் மஞ்சள் காமாலை ஏற்படும். இந்த நோய்க்கிருமி ரத்தம், தாய்ப்பால், விந்து, பெண் பிறப்புறுப்பு திரவங்களில் வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கர்ப்பிணிக்கு அல்லது தாய்க்கு இந்த நோய் இருந்தால் குழந்தைக்கும் அது தொற்றுகிறது.

    பாலுறவு மூலம் இது மற்றவர்களுக்குப் பரவும். இந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் செய்யும்போது, அந்த ரத்தத்தை பெற்றுக்கொண்டவருக்கும் இந்த நோய் வருகிறது. இவர்களுக்கு போடப்பட்ட ஊசியை சரியாக தொற்றுநீக்கம் செய்யாமல், அடுத்தவருக்கு ஊசி போடப்பட்டால், புதிய நபருக்கும் இந்த நோய் ஏற்படுகிறது.

    இது நாள்பட்ட கல்லீரல் அழற்சி நோயாக மாறி, பின்னர் புற்றுநோயாக உருவெடுக்கும். ஹெப்படைடிஸ்-பி மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி உள்ளது. குழந்தைப் பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளாமல் இருந்தால், வளர்ந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

    ×