search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்வெளி பூங்கா"

    • பழைய ராக்கெட்டுகள் இங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
    • காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் அதிக நாட்கள் இங்கு தங்கி இருந்து சுற்றுலா தலங் களை கண்டுகளிப்பதற்கு வசதியாக மத்திய, மாநில அரசுகள் கன்னியாகுமரியில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    அந்த அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் அறிவியல் அறிவை வளர்க்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை தெரிந்து கொள்ளும் வகையிலும் மத்திய அரசின் விண்வெளி துறை சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.150 கோடி செலவில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த விண்வெளி பூங்காவில் இந்திய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகளான ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் மற்றும் அறிவியல் கண்காட்சிகள் சிறுவர்-சிறுமிகளுக்கான விளையாட்டு சாதனங்கள் இடம் பெற உள்ளன. மேலும் பழைய ராக்கெட்டுகள் இங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

    இந்த விண்வெளி அறிவியல் மற்றம் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணியின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டன. இந்த விண்வெளி பூங்கா அமைய இருக்கும் இடத்தை சுற்றி பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது

    ×