search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினாடி - வினா போட்டி"

    • 18 மாணவ - மாணவிகள் 6 குழுக்களாக இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர்
    • அறிவுத் திறனை மேம்படுத்த ஏதுவாக ஒலி மற்றும் காணொளி சுற்று

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்செலென்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 'பிரேயின் பிளாஸ்ட் சந்திராயன் சேலஞ்ச்' என்ற தலைப்பில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. வின்ஸ் பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கி னார். செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் முன்னிலை வகித்தார்.

    முதல் கட்டமாக 119 மாணவர்களுக்கு தகுதிச்சுற்றாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில் தகுதி பெற்ற 18 மாணவ - மாணவிகள் 6 குழுக்களாக இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர். இப்போட்டி யினை பள்ளியின் முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்டணி நடத்தினார்.

    நிலவின் தென் துருவத்தை முதலில் தொட்ட நாடு என்ற பெருமையினை பெற்றுக் கொடுத்த சந்திராயன் 1,2,3 திட்டங்கள் குறித்து மாணவ - மாணவியர் தெரிந்து கொள்ள, அறிவுத் திறனை மேம்படுத்த ஏதுவாக ஒலி மற்றும் காணொளி சுற்று, பொதுவான கேள்விகள் சுற்று, பஷர் சுற்று, சரியானதை தேர்ந்தெடு சுற்று, அதிவிரைவுச் சுற்று, நபர்களை அடையாளம் காணுதல் சுற்று என 6 சுற்றுகள் நடைபெற்றன. இதில் லேண்டர், ரோவர், ஆர்பிட்டர், லூனார், போலார், த்ரஷ்டர் என 6 குழுக்கள் போட்டியிட்டன. 6 சுற்றுகளில் 90 கேள்விகள் கேட்கப்பட்டன. மாண வர்கள் ஆதில் பெலிக்ஸ், பெரிஷ் மாத்தியூ, யாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்ட லூனார் அணி முதல் இடத்தை பிடித்தது. மாணவர்கள் ஸ்டீவ் ஆண்டர்சன், ஜெஸ்லின், ஆதவ்ஸ்ரீ ஆகியோரின் ரோவர் அணி 2-ம் இடத்தையும், மாணவர்கள் ஷான் ஜூஸ்வின், அபி னோவ், அதுராம் ஆகியோர் அடங்கிய ஆர்பிட்டர் அணி 3-ம் பரிசினையும் வென்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் பரிசு மற்றும் வெற்றிக் கோப்பையினையும், பதக்கங்களையும் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    ×