என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய கபடிப் போட்டி"
- அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.
- தேசிய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 29-ந் தேதி திருவாரூர் மாவட்டம் வடுவூரில், தேசிய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் வி.சுரேஷ்குமார், மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான கபடிப் போட்டியில், தமிழக அணியில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தேசிய அளவிலான கபடிப் போட்டியில் தமிழக அணியில்விளையாடு வதற்கு பங்கேற்கும் மாணவர் வி.சுரேஷ்குமார் மற்றும் மாணவருக்கு பயிற்சி அளித்த வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி ஆகியோருக்கு, பள்ளி தலைமையாசிரியர் கோ.ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கு.கலைஞர் புகழ் மற்றும் பெற்றோர்களும், பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக அணியில் இடம் பிடித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக திறமை வெளிப்படுத்தி, எனது பள்ளிக்கும், நமது மாநிலத்திற்கு பெருமை தேடித் தருவேன் என மாணவர் வி.சுரேஷ்குமார் தெரிவித்தார்.