என் மலர்
நீங்கள் தேடியது "கிருஷ்ணரின் லீலைகள்"
- இந்நாட்களில் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவதும் வழக்கம்.
- இது தவிர தனிப் பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது
கடலூர்:
நவராத்திரி விழாவானது அம்பிகைக்கு ஒன்பது விதமான புஷ்பங்களை கொண்டு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து ஒன்பது நாட்கள் வழிபடுவதாகும். இந்நாட்களில் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவதும் வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று தொடங்கி 23-ந்தேதி முடிவடைகிறது.
கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் களிமண், காகித கூழ் போன்றவற்றால் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் ராமாயணம், மகா பாரதம், கிருஷ்ணரின் லீலைகள் சம்பந்தமான கதைகளை விளக்கும் வகையிலான பொம்மைகளை தயாரித்து வைத்துள்ளனர். இது தவிர தனிப் பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர் நகர சாலை ஓரங்களிலும், கோவில் வளாகங்கள் முன்பிலும், கடைகளிலும் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.