search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குர்பாஸ்"

    • நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம்.
    • முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.

    பிரிஜ்டவுன்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப்2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் இந்திய அணி சூப்பர்8 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் எனது இலக்கு பும்ரா மட்டும் அல்ல, இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவருமே என ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரர் குர்பாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையாக, எனது இலக்கு ஜஸ்பிரித் பும்ரா மட்டும் அல்ல. நான் அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களையும் அடிக்க பார்க்கிறேன். பொதுவாக ஐந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். அவர்களை நான் சமாளிக்க வேண்டும். இது பும்ராவுக்கு எதிரான ஒரு போர். ஒருவேளை மற்றொரு பந்துவீச்சாளர் என்னை வெளியேற்றலாம். ஆனால், எனக்கு அவரை (பும்ரா) அடிக்க வாய்ப்பு கிடைத்தால் அடிப்பேன். அது பும்ராவாகவோ, அர்ஷ்தீப்பாகவோ அல்லது சிராஜாகவோ இருக்கலாம். எனது ஏரியாவில் பந்து வீசினால் நான் அவர்களை அடிப்பேன் அல்லது நான் ஆட்டமிழந்து வெளியேறுவேன்.

    நாங்கள் இதற்கு முன்பு உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. முன்பு, உலகக் கோப்பையில் எப்படியாவது பங்கேற்பதாக எங்கள் மனநிலை இருந்தது. ஆனால் இப்போது எங்கள் மனநிலை சாம்பியன் ஆக வேண்டும் என்பது மட்டுமே. கோப்பையை வெல்வதில் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை.

    நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம். முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு குர்பாஸ் கூறினார்.

    • குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி உகாண்டா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் குவித்தது.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் அடித்திருந்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் உகாண்டாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சேர்ந்து 100 ரன்கள் குவித்தது.

    இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 80 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 44 ரன்களும் விளாசினர்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து இந்த ஜோடிகள் 100 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி இந்த சாதனையை படைத்துள்ளது. இதன்மூலம் குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளது.

    பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்களை கடந்துள்ளது.

    கில்கிறிஸ்ட்- ஹெய்டன் ஜோடி 2 முறையும், அலேக்ஸ் ஹேல்ஸ்-மோர்கன் ஜோடி இரண்டு முறையும், ஜெயவர்தனே- சங்கக்காரா, டேவிட் வார்னர்-வாட்சன் ஜோடிகள் இரண்டு முறையும் 100 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • உலகத்தில் உள்ள அனைத்து இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் கோலி ஒரு உத்வேகம் என குர்பாஸ் கூறினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 215 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    வெற்றிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகத்தில் உள்ள அனைத்து இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் கோலி ஒரு உத்வேகம். அதிக ரன்கள் எடுப்பது போன்ற விளையாட்டின் யுக்திகள் பலவற்றை கோலி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×