என் மலர்
நீங்கள் தேடியது "மேம்பாலம் விபத்து"
- பாலம் இடிந்து விழுந்ததால் பீதியடைந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
- விபத்தால் சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் பகதூர்ஷேக் நாகா பகுதியில் பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது.
அங்கு, மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தநிலையில், திடீரென உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
மேலும், பாலம் இடிந்து விழுந்ததால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தூண் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- டேங்கர் லாரி தீப்பிடித்ததால், நெடுஞ்சாலையை புகைமூட்டம் சூழ்ந்தது.
- மேம்பாலம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு.
பஞ்சாப்பில், மேம்பாலம் ஒன்றின் சாலை நடுவே ஏற்பட்ட விபத்தில் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது.
பஞ்சாப் மாநிலம் கண்ணா பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள மேம்பாலம் மீது எண்ணெய் டேங்கர் லாரி சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.
டேங்கர் லாரி கவிழ்ந்ததில், எண்ணெய் சாலையில் கொட்டி பல மீட்டர் தூரம் கசிந்து தீ விபத்துக்குள்ளானது.
இதில், தீ சாலை முழுவதும் பரவி, மேம்பாலம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால், நெடுஞ்சாலையை புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.