என் மலர்
நீங்கள் தேடியது "கண்ணமங்கலம் போலீசில் புகார்"
- பீரோ உடைத்து துணிகரம்
- ரூ.24 ஆயிரத்தை திருடி சென்றனர்
ஆரணி:
கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சரிதா (வயது 50). இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேத்துப்பட்டில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சரிதா குடும்பத்தோடு சென்றார். சரிதா ஊருக்கு சென்று விட்டதால் உறவினர் பழனி என்பவர் மாடுகளை பராமரித்து வந்தார்.
நேற்று இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி விட்டு சென்றார். இன்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக பழனி சரிதா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதே பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (50). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மதுரையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா மஞ்சுரி.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தண்டபாணி மதுரைக்கு சென்று விட்டதால் மனைவி மற்றும் மகன்கள் வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கீதா மஞ்சூரி மற்றும் மகன்கள் தூங்க சென்றனர்.இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் உள்ளே புகுந்து ரூ.24 ஆயிரத்தை திருடி சென்றனர்.
தண்டபாணிக்கு அருகே சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அதிலும் மர்ம கும்பல் திருட முயன்றனர். அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றனர். இன்று காலை கீதா மஞ்சுரி எழுந்து வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டிலிருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளை யடித்தது தெரிந்தது. அதே பகுதியில் வசிக்கும் பரிமளா என்பவர் வீட்டிலும் மர்ம கும்பல் புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு கொள்ளை போன வீடுகளில் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.