என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுரேஷ்"
- சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார்.
- பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
புதுடெல்லி:
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.
சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா தேவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
- பிரதமர் மோடி எழுந்து சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா பெயரை முன்மொழிந்தார்.
- ஓம்பிர்லாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறி அவர் வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் மகதாப் அறிவித்தார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முதலாக கடந்த திங்கட்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.
நேற்றும், நேற்று முன்தினமும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 26-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
பாராளுமன்ற சபாநாயகரை பெரும்பாலும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்வார்கள். ஆனால் தற்போது எதிர்க் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பாராளுமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது.
சபாநாயகரை போட்டியின்றி தேர்வு செய்வதற்காக கடந்த 2 நாட்களாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தருவதாக இருந்தால் சபாநாயகரை ஆதரிக்க தயார் என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்தது.
இந்த நிபந்தனையை பா.ஜ.க. ஏற்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் பாராளுமன்ற சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதே சமயத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்று மதியம் அவர்கள் இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன் மூலம் பாராளுமன்றத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே முதல் பலப்பரீட்சை உருவானது.
இதற்கிடையே இன்று காலை சபாநாயகரை ஏக மனதாக தேர்வு செய்ய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கடைசி நேர முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கியது.
தற்காலிக சபாநாயகர் மகதாப் சபாநாயகர் தேர்தலை நடத்தினார். இதையடுத்து பிரதமர் மோடி எழுந்து சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா பெயரை முன்மொழிந்தார். மத்திய மந்திரிகள் ராஜ் நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி மற்றும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் சிரக்பஸ்வான் உள்பட பலர் வழிமொழிந்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை காங்கிரஸ் எம்.பி. பிரேமசந்திரன் முன்மொழிந்தார். அகிலேஷ் யாதவ், கனிமொழி, சுப்ரியா சுலே உள்பட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வழிமொழிந்தனர்.
அதன்பிறகு 11.13 மணிக்கு சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது. டிவிசன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்தப்படலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் எம்.பி.க்களுக்கு உரிய இருக்கை ஒதுக்கப்படாததால் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓட்டெடுப்பை நடத்த தற்காலிக சபாநாயகர் மகதாப் முடிவு செய்தார்.
அதன்படி ஓம்பிர்லாவை ஆதரிப்பவர்கள் குரல் கொடுக்கலாம் என்று அவர் அறிவித்தார். அடுத்த வினாடி பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மிக பலத்த சத்தத்துடன் ஓம்பிர்லாவை ஆமோதித்து குரல் எழுப்பினார்கள். அதன் பிறகு எதிர்ப்பவர்கள் குரல் கொடுக்கலாம் என்று தற்காலிக சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.
அப்போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நோ என்று குரல் எழுப்பினார்கள். இதையடுத்து ஓம்பிர்லாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறி அவர் வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் மகதாப் அறிவித்தார். இதன் மூலம் புதிய சபாநாயகராக ஓம்பிர்லா தேர்வானார்.
அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடியும், ராகுலும் புன்னகைத்தபடி கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். அதன் பிறகு புதிய சபாநாயகர் பதவி ஏற்பு வைபவம் நடைபெற்றது.
ஓம்பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பாரம்பரிய முறைபடி அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமர்ந்திருந்த தற்காலிக சபாநாயகர் மகதாப் எழுந்து நின்று வணங்கி ஓம்பிர்லாவை வரவேற்று கை குலுக்கினார்.
பிறகு அவர் தனது இருக்கையை விட்டு விலகி நிற்க ஓம்பிர்லா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்வுக்கு ஒத்துழைப்பு தெரிவித்த அனைவருக்கும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நன்றி தெரிவித்தார்.
- முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
- பாராளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமை யிலான கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்தனர். ஆனால் இந்த தடவை பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் சபாநாயகர் தேர்தல் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை சபாநாயகர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டது இல்லை. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் ஏகமனதாக தேர்வாகி இருக்கிறார். ஆனால் இந்த தடவை இந்தியா கூட்டணிக்கு 232 எம்.பி.க்கள் இருப்பதால் அவர்கள் வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா சார்பில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய ஓசையின்றி ஆலோசனை நடந்து வந்தது. ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி புதிய சபாநாயகர் ஆகலாம் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் கடந்த சில தினங்களில் அதில் மாற்றம் ஏற்பட்டு கடந்த முறை சபாநாயகராக இருந்த ஓம்பிர்லா மீண்டும் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிக்கையை பாராளுமன்ற செயலாளர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக நேற்று மாலை முதல் புதிய சபாநாயகர் தொடர்பாக அடுத்தடுத்து பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா வீட்டில் நேற்று இரவு நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது. ராஜ்நாத்சிங், அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதித்தனர்.
இன்று காலை சபாநாயகர் தேர்தல் தொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் போனில் பேசினார்.
ஏற்கனவே அவர் இது தொடர்பாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தி இருந்தார். இதையடுத்து இன்று காலை சபாநாயகர் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் ஒருமித்த கருத்து உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க. தலைவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.
காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரிடமும் ராஜ்நாத்சிங் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராகுல் ஒரு நிபந்தனையை விதித்தார். துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு ராஜ்நாத்சிங் மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து பதில் சொல்வதாக தெரிவித்தார். ஆனால் அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் தங்களை பா.ஜ.க. அவமதிப்பதாக கருதினார்கள்.
ராகுல்காந்தி இது தொடர்பாக பேட்டியளித்தபோது, "சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க நாங்கள் தயார். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும்" என்று கூறினார். இதையடுத்து பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் அலுவலகத்துக்கு காங்கிரசை சேர்ந்த கே.சி.வேணுகோபால், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு இருவரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது துணை சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க ராஜ் நாத்சிங் மறுத்து விட்டார்.
இதையடுத்து பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ராஜ்நாத்சிங் அலுவலகத்தில் இருந்து கே.சி.வேணுகோபாலும், டி.ஆர்.பாலுவும் புறப்பட்டு சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது. கேரளாவை சேர்ந்த 8 தடவை எம்.பி.யான சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் பாராளுமன்ற அலுவலகத்தில் சுரேஷ் தனது மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து ஆளும் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதன் மூலம் சபாநாயகர் பதவிக்கு பாரதிய ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் 1946-ம் ஆண்டு முதல் இதுவரை சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதே கிடையாது.
இதற்கு முன்பு 17 தடவை அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் சபாநாயகர் அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி துணை சபாநாயகர் பதவியை முன்நிறுத்தி போட்டியை உருவாக்கி இருக்கிறது. இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு ஓம்பிர்லா வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நாளை சபாநாயகர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடக்கும்போது எத்தகைய நடைமுறைகளை கையாள்வது என்று ஆலோசனை நடத்தினார்கள்.
பாராளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர். எனவே ஓட்டெடுப்பில் ஓம்பிர்லா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது முறையாக சபாநாயகர் ஆகும் ஓம்பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.
- சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- தந்தை வெங்கடேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
கிருஷ்ணகிரி அருகே சென்னசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி லட்சுமி. இவரது மகன் சுரேஷ் (வயது40). இவர் 'பூ போன்ற காதல்' என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன் தியேட்டர்களில் ரிலீசானாது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி சரியாக ஓட வில்லை என்பது தெரிய வந்தது. இதனால் மனவேதனையடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன சுரேஷின் தந்தை வெங்கடேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
மேலும், மாயமான சுரேஷ், வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்பு தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள், இந்த படத்தை முடிப்பதற்காக கடனாக ரூ.5 லட்சம் வாங்கியிருந்தேன். கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது. இந்த படத்தை நம்பிதான் இருந்தேன். 20 டிக்கெட் கூட வர மாட்டிங்குது, இப்படியே போனால் கண்டிப்பாக என்னால் உயிர்வாழ முடியாது. எனக்கு என்ன பண்றது என தெரியவில்லை. நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளேன். நிறைய பேர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. நாளைக்கு நான் கண்டிப்பாக உயிரோட இருக்கமாட்டேன்.
உயிரோடு இருக்கனும்னா இந்த வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி எனக்கு உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் நிறையபேர் என் திரைப்படத்தை பார்ப்பார்கள். இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சுரேஷின் தாய் லட்சுமி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். படம் சரியாக ஓடவில்லை என்பதால் நடிகர் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்