என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிமரம் பிரதிஷ்டை"

    • வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது
    • புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.4.67 கோடி செலவில் நடைபெற்ற திருப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

    வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பூக்களை தூவி சிறப்பு தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி மாரியம்ம னுக்கு இன்று காலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடிமர பிரதிஷ்டை விழாவில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், உறுப்பினர்கள் ஜெய், ரமேஷ் பாபு, வினிதா, சுரேஷ்குமார், இந்து அறநிலை டி.சத்யா என்ற குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது.

    ×