search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்பு பயிருக்கு"

    • மைக்ரோ நுண்ணூட்ட கலவையை டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது.
    • விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி பொம்மன்பட்டி பிரமாண்டியூர் பகுதியை சேர்ந்த விவசாயி செங்கோ ட்டையன். இவர் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.

    தற்போது கரும்பு பயிர் 60 நாள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பயிர் வளர்ச்சி அடையவும், அதிகமாக மகசூல் பெறவும் மைக்ரோ நுண்ணூட்ட கலவையை டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது.

    இதனை சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

    மேலும் விவசாயி செங்கோட்டையன் இதுகுறித்து கூறும்போது:- கரும்பினுடைய வளர்ச்சிக்கு இந்த மைக்ரோ நுண்ணூ ட்டக் கலவையை பயிர்கள் மீது தெளித்தால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும் மற்றும் அதிக மகசூல் கிடை க்கும்

    மேலும் மண்ணில் உள்ள நுண்ணூட்ட பற்றாக்குறை வினால் இவை பயன்படுத்த வேண்டி உள்ளது. சராசரி யாக ஒரு முறை இந்த டிரோன் மூலம் நுண்ணூ ட்டத்தை தெளிக்க ஒரு ஏக்கருக்கு சராசரி ரூ.900 செலவாகிறது. இருந்தும் பயிர்களின் வளர்ச்சிக்காக இதை செய்ய வேண்டி உள்ளது என்றார்.

    ×