search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள் முடக்கம்"

    • சிமெண்ட் விலை ‘திடீர்’ உயர்வால் கட்டுமான பணிகள் முடங்கியது.
    • எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்என ஒப்பந்தாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    கட்டுமான தொழிலில் அத்தியாவசியமாக இருப்பது சிமெண்ட். பல்வேறு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் பெருகியதால் போட்டா போட்டி ஏற்பட்டு சிமெண்ட்விலை குறைந்தது. மேலும் அரசு சார்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் சிமெண்ட் விற்பனை யெ்யப்பட்டது. இங்கு சிமெண்ட் மூடைகள் சலுகை விலையில் கிடைத்தன. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசு மூலம் நடைபெறும் கட்டிட பணிகளுக்கும் இந்த சிமெண்ட் மூடைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.இதன் மூலம் பலர் வேலைவாய்ப்பு பெற்றனர்.இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சிமெண்ட் விலை திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மூடை ரூ.350-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.450-க்கு விற்னை செய்யப்படுகிறது. இதனால் கட்டிட ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசிடம் ஒப்பந்தப்புள்ளி பெற்று பொது கட்டிடங்களை கட்டி வருபவர்களுக்கு சிமெண்ட் விலைஉயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஒப்பந்ததாரர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்குள் கட்டிடங்களை கட்ட வேண்டும். ஆனால் தற்போது சிமெண்ட் விலை ஏற்றத்தால் கூடுதலாக செலவாகும் தொகையை பெறமுடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் சிமெண்ட் விலை உயர்வால் தாங்கள் கட்டிட வரும் புதிய வீடுகளின் வேலைகள் தொய்வடைந்துள்ளன. மேலும் கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்என ஒப்பந்தாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×